உன்னை விட உயர்ந்தது உண்டா? - Motivational Stories In Tamil

ஜென் மடாலயம்: ஜென்ம மடாலயம் ஒன்றில், அங்கிருந்த குருநாதர் தன் சீடர் களுக்கு தத்துவ கதை ஒன்றை கூறிக்கொண்டிருந்தார். அந்த கதையின் உண்மை துவம் தன இது.

motivational stories in tamil pdf

குரு கூற ஆரம்பித்தார்: முன்னொரு ஒருகாலத்தில் ஒரு கல் உடைக்கும் தொழிலாளி இருந்தான். அந்தத் தொழிலில் அவனுக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வருமானம் எதுவும் இல்லை.

அவன் தன் அன்றாட வாழ்க்கையை நடத்துவதே பெரும் சுமையாக இருந்தது. இதன் காரணமாக அவனுக்கு தன் வாழ்க்கையே வெறுப்பாக இருந்தது வந்தது.

இப்படி இருக்க, ஒரு நாள் அவன் சென்ற வழி ஒன்றில் பெரிய செல்வந்தர் வீடு ஓன்று தென்பட்டது. 

அவன் கண்ட  அந்த வீட்டில் உள்ள அணைத்து பொருட்களும், அவனுக்கு அதிக ஆசை கலந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

அவன் தனக்குள் பேச துவங்கினான், அடடா.. அந்த செல்வந்தருக்கு எத்தனை செல்வாக்கு. உடனே அவனுக்கு பணக்காரர்கள் மீது பொறாமையாக இருந்தது. 

அவன் தானும் அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்தால் எப்படியிருக்கும்? என என்ன துவங்கினான்.

அதேபோல் அவனும் ஆழ்ந்தவசமாக பெரிய பணக்காரனாகி விட்டான். அவன் நினைத்ததைவிட மெகா பெரியளவுக்கு அளவுக்கு செல்வங்கள் வந்தடைந்தன.

மறுநாள் வழியில் ஒரு அரசு அதிகாரி சென்றார்: 

பல்லக்கில் சென்ற அவரை அனைவரும் வணங்கினர். அதில் பல சேவகர்கள், படை வீரர்கள், மக்கள் என்று அனைவரும் பயந்து கும்பிட்டு வழிவிட்டனர்.

மெகா பெரிய செல்வந்தர்கள் கூட விழுந்து வனகினர். இப்போது கல் உடைப்பவன் மனசெல்லாம் அந்த அதிகாரிதான் நின்றார்.

வாழ்ந்தால் இப்படியல்லவா வாழனும், என்னா அதிகாரம்’ என்று நினைத்தான். அதுவும் அவனுக்கு பலித்தது. பெரும் அதிகாரம் படைத்த அதிகாரியாகி விட்டான். 

அவனைப் பார்த்தாலே எல்லோரும் பயந்தனர்: 

சில நாளில் மக்கள் வெறுக்கும் அளவுக்கு அவன் அதிகாரம் எல்லை மீறிப் போனது.

ஒரு கோடை நாள், தனது பல்லக்கில் பயணித்துக் கொண்டிருந்தான் கல் உடையப்பவன்,  அதாவது இப்போது அதிகாரியாக இருக்கும் கல் உடைப்பவன். 

வெயில் சுள்ளென்று அவனுக்கு சுட்டது. இருக்கையில் உட்காரவே முடியாத அளவு வெப்பம் கொட்டியது. அண்ணாந்து பார்த்தான். வானத்தில் கம்பீரமாக தகதகத்தது சூரியன்.

என்னப்பா உலகத்துக்கு மேலே இருந்துகொண்டு இந்த சூரியன் என்னமா ஆட்டிப் படைக்குது. சரி இருக்கட்டும்! நானும் சூரியனாகி எல்லாரையும் எனக்கு கீழே வச்சி வாட்டி எடுப்பேன’ என்றான்.

உடனே அவன் தற்போது சூரியனாகிவிட்டான்!

அவன் தனது கிரகணங்களை பல மடங்கு வெப்பமாக்கி பூமியில் செலுத்தி அத்தனைப் பேரையும் துன்புறுத்திவந்தான். அவனுக்கு மக்களும், விவசாயிகளும், தொழிலாளர்களும் அதிக சாபமிட்டனர். 

அந்த சமயத்தில் பார்த்து ஒரு கரிய மேகம் கடந்துபோனது. சூரியன் அந்த மேகத்துக்குள் மறைய, மக்கள் மகிழ்ந்தார்கள்.

உடனே அவன் எண்ணத்தை பாருங்கள்: 

ஓகோ.. மேகம் நினைச்சா சூரியனையே ஜெய்துவிடுமா, அப்ப என்றால் நானும் மேகமாகிட்டா போச்சு’ என நினைத்தான். அதன்படியே அவன் மேகமாகிவிட்டான்.

அடுத்தென்ன, பூமியெங்கும் மழையை பொழிந்து மடை திறந்த வெள்ளம் போல கொட்டி தீர்த்தான். எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடு, மக்கள் மறுபடியும் அவனை சபித்தனர். 

உடனே பலத்த வேகமான காற்று வீச, மேகம் தாக்குப் பிடிக்காமல் கலாய்ந்தோடியது போனது.

அடுத்தென்ன: 

இந்த காற்றுக்கு எவ்வளவு சக்தி.. நானும் காற்றாக மாறி உலகத்தை ஒரு வழி பண்றேன’ என்று நினைத்தான். உடனே அவன்  மேகமாக இருந்த கல் உடைப்பவன் காற்றாக மாறினான்.

பிறகும் அவன் சும்மாயில்லை: வலிமையான காற்றாகி மாறி பூமியையே ஆட்டிப் பார்த்ததான். மரங்களையும் வீடுகளையும் பெயர்த்தெடுத்து வீசிநான். 

அணைத்து உயிரினங்களும் நொந்து சாபமிட்டது. அப்போது அவனை திடீரென ஏதோ ஒரு பெரிய உருவம் தடுத்து நிறுத்தியது போல உணர்வு. நன்றாக பார்த்தால் ஒரு பெரும் பாறை அது.

அடங்காத அவன்:

காற்றையும் தடுக்கும் அளவு இந்தப் பாறைக்கு பலமா என எண்ணினான். நானும் பாறையாவேன் என்றான், உடனே பாறையானான். 

இந்த பூமியில் யாராலும் தன்னை அசைக்க முடியாது என்ற பலத்துடன் இருந்தான். அப்போதுதான் அந்த சத்தம் அவனுக்கு கேட்டது. அது ஒரு சிறிய உளியை வைத்து அவன் மீது யாரோ அடிக்கும் சத்தம்.

இப்போது பாருங்கள் நடந்தததை: அட, உலகின் சர்வ பலம் மிக்க இந்த பாறையை விட பலமானவன் யாரடா அது? என்று பார்த்தான்அவன். பாறையாக இருந்த அந்த கல் உடைப்பவன்.

அப்போது, அந்தப் பாறையை உளியால் உடைத்துக் கொண்டிருந்தான் வேறு ஒரு ஒரு கல் உடைப்பவன்.

இந்த முழு கதையை சொல்லி முடித்த குருநாதர்:

ஒன்றை விட ஒன்று சிறந்ததாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு நாம் மனதை மாற்றிக்கொண்டே செல்லக் கூடாது என்றார்.

எப்போதும் எந்தசமயத்திலும் உன்னை விட உயர்ந்தவர் இல்லை என்று நினைக்க வேண்டும என்றார் குரு. அவரின் வார்த்தையை கேட்ட சிழியர்கள் அனைவரும் நல்லதொரு படத்தினை கற்றுகொண்டணர். 

ககுரு சொன்ன கதையில் அனைவரும் ஒரு கருத்து சொன்னனர். உங்கள் மனதில் புரிந்த கருத்தை நீங்களும் கீழேயே சொல்லுங்கள்.

PDF Embed,

உன்னை விட உயர்ந்தது உண்டா? - PDF File DOWNLOAD

motivational stories in tamil pdf


Comments